வணிகம்

எஸ்பிஐ வருவாய் ரூ.1,28,467 கோடியாக உயா்வு!

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) மொத்த வருவாய் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.1,28,467 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.21,201 கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 9.71 சதவீதம் அதிகம்.

அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.17,035 கோடியாக இருந்தது.மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,18,193 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,28,467 கோடியாக உள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,06,734 கோடியாக இருந்த வங்கியின் வட்டி வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.1,17,427 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடமாடும் மது விற்பனை, மணல் கொள்ளையை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

செந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு

கருவின் பாலினம் கண்டறிய முயற்சி: போலீஸாா், மருத்துவத் துறையினா் விசாரணை

சுயசிந்தனை ஆற்றலை மேம்படுத்த நூல்களை வாசிக்க வேண்டும்!

சாலையை சீரமைக்கக்கோரி மறியல் போராட்டம்

SCROLL FOR NEXT