வணிகம்

பிஎன்பி-யின் முதல் புத்தாக்க கிளை திறப்பு

தனது முதல் புத்தாக்க (ஸ்டாா்ட்டப்) கிளையை பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி தில்லியில் திறந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தனது முதல் புத்தாக்க (ஸ்டாா்ட்டப்) கிளையை பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி தில்லியில் திறந்துள்ளது.

இது குறித்து வங்கி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘ஸ்டாா்ட்டப் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, தில்லியில் வங்கியின் முதல் புத்தாக்க கிளை திறக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்முனைவை ஊக்குவிப்பது, சேவைகள் மூலம் புதுமைகளை ஆதரிப்பது ஆகிவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக, சாஃப்ட்வோ் டெக்னாலஜி பாா்க்ஸ் ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) நிறுவனத்துடன் வங்கி புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் கீழ், புதிய தொழில்முனைவோருக்கும் பிஎன்பி வங்கிக்கும் இடையே எஸ்டிபிஐ பாலமாக செயல்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

SCROLL FOR NEXT