வணிகம்

மாருதி விக்டோரிஸூக்கு விருது

மாருதி சுஸூகி நிறுவனத்தின் புத்தம் புதிய விக்டோரிஸ் ரகத்துக்கு 2026-ஆம் ஆண்டுக்கான இந்திய கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: மாருதி சுஸூகி நிறுவனத்தின் புத்தம் புதிய விக்டோரிஸ் ரகத்துக்கு 2026-ஆம் ஆண்டுக்கான இந்திய கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2026-ஆம் ஆண்டின் மிகச் சிறந்த எஸ்யுவி கார் என்ற விருதை புத்தம் புதிய விக்டோரியஸ் ரகம் வென்றுள்ளது. இந்தியாவின் முன்னணி வாகனத் துறை பத்திரிகையாளர்களின் நடுவர் குழுவால் மதிப்பிடப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

விக்டோரிஸின் அறிவார்ந்த தொழில்நுட்பம், அனைத்து வகையான பாதுகாப்பு, குறிப்பிடத்தக்க வடிவமைப்பு ஆகியவற்றின் கலவை நடுவர் குழுவைக் கவர்ந்தது.

இந்த எஸ்யுவி, இன்றைய புதிய தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு சாத்தியமான அனைத்து அம்சங்களையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஸ்டைல், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் பல புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகளை ஒன்றிணைக்கிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT