இந்திய மின்சார வாகனச் சந்தையில் கோலோச்சி வரும் டாடா மோட்டார்ஸின் புதுவரவாக புத்தாண்டில் புதிய ரக மின்சார கார்கள் அறிமுகமாக உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கதாக, 2026-ஆம் ஆண்டு இறுதியில் டாடா அவின்யா எக்ஸ் அறிமுகமாகும் என்று டாட்டா மோட்டார்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சொகுசுக் கார்கள் பிரிவைக் குறிவைத்து டாடா அவின்யா எக்ஸ் வடிவமைக்கப்படுகிறது. டாடாவின் புது ஜென் 3 இவி வடிவைப்பில் பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்காகவே பிரத்யேகமான ஸ்கேட்போர்டு ஸ்டைல் தளத்தில் கட்டமைக்கப்படுகிறது.
சொகுசுக் கார்கள் பிரிவில் சந்தைப் போட்டியைச் சமாளிக்க குறைவான விலையில் டாட்டா களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுவதால், இதன் விலை ரூ. 22 லட்சம் முதல் ரூ. 35 லட்சத்துக்குள் நிர்ணயிக்கப்படலாம் என்றும் டாட்டா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
வாடிக்கையாளர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடாவின் சியரா இவி 2026இல் சந்தைக்கு வர தயாராக உள்ளது.
இந்திய மின்சார கார்கள் சந்தையில்
நெக்ஸான் இவி
ஹாரியர் இவி
பஞ்ச் இவி
டியாகோ இவி
கர்வ் இவி ஆகிய கார்களின் மூலம் வாடிக்கையாளர்களின் முதன்மை விருப்பத் தேர்வாக மாறியிருக்கும் டாடா மோட்டார்ஸ், இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மின்சார கார்களை விற்பனை செய்துள்ளது.
அதிலும் குறிப்பாக, நெக்ஸான் இவி இந்தியாவில் ஒரு லட்த்துக்கும் மேல் விற்பனையாகியிருப்பது, இந்திய மின்சார வாகனச் சந்தையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், அதிகரித்து வரும் மின்சார வாகன விற்பனையைக் கருத்திற்கொண்டு வாடிக்கையாளர்கள் சார்ஜிங் ஏற்ற வசதியாக அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் ஒரு லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.