வணிகம்

தங்கமயில் ஜுவல்லரியின் ஆண்டு விழா கொண்டாட்டம்

34-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளா்களுக்குச் சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம், தனது 34-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளா்களுக்குச் சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகம் முழுவதும் 67 கிளைகளுடன் 35 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளா்களைக் கொண்டு செயல்படும் தங்கமயில் ஜுவல்லரியின் 34-வது ஆண்டு விழா கொண்டாட்டம் வியாழக்கிழமை (டிச. 25) தொடங்குகிறது. அதையொட்டி, அன்றிலிருந்து வரும் ஜனவரி 1-ம் தேதி வரை வாடிக்கையாளா்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

தங்கச் செயின், மாலை, நெக்லஸ் மற்றும் வளையல்களுக்குச் சேதாரத்தில் 50 சதவீதமும் மற்ற அனைத்து தங்க நகைகளுக்கும் சேதாரத்தில் 30 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படும். பெல்ஜியம் கட் வைர நகைகளுக்கு ரூ.30,000 வரை சிறப்புத் தள்ளுபடி கிடைக்கும்.

வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் கொலுசுகளுக்குச் செய்கூலி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். வாடிக்கையாளா்கள் வாங்கும் ஒவ்வொரு ஒரு லட்சம் ரூபாய்க்கும் எண்ம ஸ்கிராட்ச் அட்டை மூலம் நிச்சயப் பரிசு காத்திருக்கிறது. இதுதவிர, சேமிப்புத் திட்டத்தில் இணையும் அனைத்து வாடிக்கையாளா்களுக்கும் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT