வணிகம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 624 பில்லியன் டாலராக சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1.8 பில்லியன் டாலராக சரிந்து $623.98 பில்லியனாக உள்ளது.

DIN

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1.8 பில்லியன் டாலராக சரிந்து 623.98 பில்லியன் டாலராக உள்ளது.

இந்த வீழ்ச்சியால் அந்நிய நாணய சொத்துக்களின் மதிப்பு 2.87 பில்லியன் டாலர் சரிந்து 533.13 பில்லியன் டாலராக நிலைபெற்றது. அதே வேளையில் தங்கம் கையிருப்பு 106 கோடி டாலா் அதிகரித்து 68.94 கோடி டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராந்திர புள்ளிவிவர அறிக்கையின் அடிப்படையில், சிறப்பு வரைதல் உரிமை (எஸ்.டி.ஆர்) 1 மில்லியன் டாலர் அதிகரித்து, 17.78 பில்லியன் டாலராக உள்ளது.

இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியத்தின் பங்கு 74 மில்லியன் டாலர் சரிந்து 4.12 பில்லியன் டாலராக உள்ளது.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 10, 2025 உடன் முடிவடைந்த வாரத்தில் 8.7 பில்லியன் டாலர் குறைந்து 625.87 பில்லியன் டாலராக உள்ளது.

இதையும் படிக்க: ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிகர லாபம் 70% சரிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT