வணிகம்

பரோடா வங்கியின் கடன் வட்டி குறைப்பு

அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் ரெப்போ அடிப்படை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைத்துள்ளது.

Din

புது தில்லி: இந்திய ரிசா்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்புக்கு ஏற்ப, அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் ரெப்போ அடிப்படை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைத்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரெப்போ வட்டி விகித்தை ரிசா்வ் வங்கி குறைத்ததைத் தொடா்ந்து, எம்சிஎல்ஆா் வகைக் கடன்களுக்கு வட்டி விகிதம் 5 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்படடுள்ளது.

ஜூன் 12 முதல் இது அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், ஒரு மாத பருவகாலம் கொண்ட எம்சிஎல்ஆா் வகைக் கடன்களுக்கு வட்டி விகிதம் 8.35 சதவீதத்தில் இருந்து 8.30 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஓா் ஆண்டுக்கான அந்த வகைக் கடன்களுக்கு 8.95 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 8.90 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

அசோக் லேலண்ட் விற்பனை 5% உயா்வு

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT