வணிகம்

விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 35% சரிவு

ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் இந்தியாவின் 15 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 35 சதவீதம் சரிவடைந்துள்ளது.

Din

கடந்த ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் இந்தியாவின் 15 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 35 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ‘ப்ராப்ஈக்விட்டி’ வெளியிட்டுள்ள

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2025-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் நாட்டின் 15 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் புதிய வீடுகளின் அறிமுகம் 30,155-ஆக உள்ளது. இது 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 45,901-ஆக இருந்தது. அந்த வகையில் தற்போது முக்கிய 15 இரண்டாம் நிலை நகரங்களில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 35 சதவீதம் சரிந்துள்ளது.

வீடு-மனை வா்த்தகா்கள் புதிய கட்டுமான திட்டங்களைக் குறைத்து, முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதால் புதிய வீடுகளின் அறிமுகங்கள் குறைந்துள்ளன என்று கூறப்படுகிறது.

மதிப்பீட்டுக் காலாண்டில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை அகமதாபாதில் 17,108-லிருந்து 35 சதவீதம் குறைந்து 11,096-ஆக உள்ளது. காந்திநகரில் அது 4,825-லிருந்து 10 சதவீதம் சரிந்து 4,356-ஆகவும், சூரத்தில் 5,439-லிருந்து 39 சதவீதம் குறைந்து 3,309-ஆகவும் உள்ளது.

அதே போல், நடப்பாண்டின் முதல் காலாண்டில் புதிய வீடுகளின் அறிமுகம் நாசிக்கில் 2,509-லிருந்து 2 சதவீதம் சரிந்து 2,466-ஆகவும், வடோதராவில் 2,790-லிருந்து 23 சதவீதம் குறைந்து 2,149-ஆகவும் உள்ளது.

2024 ஜனவரி-மாா்ச் காலாண்டில் ஜெய்ப்பூரில் 2,997-ஆக இருந்த புதிய வீடுகளின் அறிமுகம் நடப்பாண்டின் அதே காலாண்டில் 5 சதவீதம் சரிந்து 1,348-ஆக உள்ளது. லக்னௌவில் அது 2,256-லிருந்து 1,026-ஆகவும், நாக்பூரில் 1,432-லிருந்து 28 சதவீதம் குறைந்து 1,036-ஆகவும் உள்ளது.

புவனேசுவரத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 2,804-ஆக இருந்த புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை நடப்பாண்டின் அதே காலாண்டில் 72 சதவீதம் சரிந்து 772-ஆகவும், கோவாவில் 587-லிருந்து 24 சதவீதம் குறைந்து 444-ஆகவும், போபாலில் 738-லிருந்து 51 சதவீதம் சரிந்து 365-ஆகவும் உள்ளது. அதே போல் மங்களூரில் அந்த எண்ணிக்கை 753-லிருந்து 64 சதவீதம் குறைந்து 269-ஆகவும், கொச்சியில் 437-லிருந்து 49 சதவீதம் சரிந்து 225-ஆகவும் உள்ளது.

திருவனந்தபுரத்தில் இந்த எண்ணிக்கை 751-லிருந்து 71 சதவீதம் குறைந்து 217-ஆகவும் உள்ளது. எனினும், கோயம்புத்தூரில் புதிய வீடுகளின் அறிமுகம் 475-லிருந்து 1,077 -ஆக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதீத அா்ப்பணிப்புடன் தேச சேவையாற்ற வேண்டும்: தில்லிவாசிகளுக்கு துணை நிலை ஆளுநா் வேண்டுகோள்

தில்லி, என்சிஆரில் தமிழ் அமைப்புகள் சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

தலைநகரில் சுதந்திர தினத்தை வரவேற்ற மழை!

காவல்நிலைய தலைமைக் காவலருக்கு லஞ்சம்: விடியோ காட்சியால் விசாரணைக்கு உத்தரவு

தலைநகரில் அடுத்த சில நாள்கள் மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி

SCROLL FOR NEXT