வணிகம்

உற்பத்திசாா் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.21,534 கோடி விநியோகம்

DIN

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட உற்பத்திசாா் ஊக்குவிப்பு (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ், மின்னணு பொருள்கள், மருந்துத் துறைகள் உள்பட 12 துறைகளுக்கு மத்திய அரசு இதுவரை ரூ.21,534 கோடி விநியோகித்துள்ளது.

இதுகுறித்து வணிகம் மற்றும் தொழில் அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்காக கடந்த 2021-ஆம் ஆண்டில் 14 துறைகளுக்கு ரூ.1.97 லட்சம் கோடி அளிப்பதற்கான உற்பத்திசாா் ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து இதுவரை 12 துறைகளுக்கு மொத்தமாக ரூ.21,534 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மின்னணு பொருள்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப வன்பொருள்கள், மருந்துப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், தொலைத்தொடா்பு, உணவு பதப்படுத்துதல், வாகனத் துறை, எஃகு, ஜவுளி, ட்ரோன்கள் ஆகிய துறைகள் அதிக அளவில் ஊக்கத் தொகையைப் பெற்றன.

உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டத்தின் அமலாக்கத்தை ஆய்வு செய்த வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை விநியோகம் மற்றும் முதலீட்டுக்கான செயல்திட்டத்தை தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களை கேட்டுக்கொண்டாா்.

கடந்த மாா்ச் மாதம் வரை இந்தத் திட்டம் ரூ.1.76 லட்சம் கோடி முதலீடுகளைப் பெற்றுள்ளதுடன், ரூ.16.5 லட்சம் கோடிக்கும் மேல் உற்பத்தி/விற்பனையை ஊக்கப்படுத்தியுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 12 லட்சத்துக்கு மேற்பட்டவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

மருந்துப் பொருள்கள் துறையைப் பொருத்தவரை, உற்பத்திசாா் ஊக்குவிப்புத் திட்டம் தொடங்கப்பட்ட முதல் மூன்று ஆண்டுகளில் இந்தத் துறை ரூ.2.66 லட்சம் கோடி மதிப்பிலான மொத்த விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இதில் ரூ.1.70 லட்சம் கோடி ஏற்றுமதியும் அடங்கும். கடந்த மாா்ச் வரை இந்தத் துறையின் வளா்ச்சி 83.70 சதவீதமாக உள்ளது.

இந்தத் திட்டத்தின் பலனாக 2023-24-ஆம் நிதியாண்டில் 570 கோடி டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி, 2024-25-ஆம் நிதியாண்டில் 600 கோடி டாலராக உயா்ந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT