வணிகம்

இந்தியாவில் இஎக்ஸ் 30 மாடலை அறிமுகப்படுத்தும் வால்வோ!

ஸ்வீடன் நாட்டின் ஆடம்பர கார் தயாரிப்பாளரான வால்வோ தனது புதிய ரக மாடலான மின்சார எஸ்யூவி இஎக்ஸ்30 - ஐ இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

DIN

புதுதில்லி: ஸ்வீடன் நாட்டின் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ, தனது புதிய ரக மாடலான மின்சார எஸ்யூவி, இஎக்ஸ்30 - ஐ இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

2030ல் மின்சார கார்களின் விற்பனை 90 முதல் 100 சதவிகித விற்பனையை அடைய வேண்டும் என்ற உலகளாவிய லட்சியத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் ஒரு மின்சார மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜோதி மல்ஹோத்ரா மேலும் தெரிவித்ததாவது:

புதிய எக்ஸ்சி 60 எஸ்யூவியை இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த முன்னுதாரண மாற்றம் மின்சார வாகனப் புரட்சிக்கு வழிவகுத்துள்ளது.

எங்களிடம் எக்ஸ்சி 40 மற்றும் சி 40 மாடல் மட்டுமே உள்ள நிலையில் கடந்த ஆண்டு, நாங்கள் விற்ற ஒவ்வொரு 4 கார்களில் ஒன்று மின்சார கார் ஆகும்.

இந்தியாவில் நாங்கள் விற்கும் எங்கள் கார்களில் 25% க்கும் அதிகமானவை மின்சாரத்தால் ஆனவையே. ஒவ்வொரு ஆண்டும் ஒரு மின்சார மாடலைக் கொண்டுவருவதற்கான நிறுவனத்தின் திட்டங்களை மீண்டும் வலியுறுத்திய அவர், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இஎக்ஸ்30 ஐ கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்றார்.

தற்போது நாங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். ஏற்கனவே பெங்களூரில் அசெம்பிள் செய்யப்பட்ட மற்ற கார்களைப் போலவே இந்த காரையும் விற்க நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT