வணிகம்

மின்சாரக் காா்களின் விற்பனை 19% அதிகரிப்பு

இந்தியாவில் மின்சார பயணிகள் வாகனங்களின் விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 18.95 சதவீதம் அதிகரித்துள்ளது.

DIN

இந்தியாவில் மின்சார பயணிகள் வாகனங்களின் விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 18.95 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் 8,968 மின்சார பயணிகள் வாகனங்கள் இந்தியச் சந்தயில் விற்பனையாகின. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 18.95 சதவீதம் அதிகம். அப்போது மின்சார பயணிகள் வாகனங்களின் விற்பனை 7,539-ஆக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் மின்சார பயணிகள் வாகனப் பிரிவில் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அந்த மாதத்தில் நிறுவனம் 3,825 மின்சார பயணிகள் வாகனங்களை விற்பனை செய்தது.அதே நேரம், 3,270 மின்சார பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து இந்தப் பிரிவில் எம்ஜி மோட்டாா் இரண்டாவது இடத்தில் உள்ளது.இந்தியாவின் ஒட்டுமொத்த பயணிகள் வாகனச் சந்தையில் மின்சார வாகனங்களின் பங்கு 3 சதவீதத்தை எட்டியுள்ளது.

2 சக்கர வாகனங்கள்: கடந்த பிப்ரவரி மாதத்தில் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 76,086-ஆக இருந்தது. 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 8.05 சதவீதம் குறைவு. அப்போது 82,745 மின்சார இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகின.

மதிப்பீட்டு மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவன மின்சார இரு சக்கர வாகனங்களின் விற்பனை 21,389-ஆக இருந்தது.கடந்த பிப்ரவரில் மின்சார இரு சக்கர வாகனங்களின் விற்பனை சரிந்தாலும், ஒட்டுமொத்த இரு சக்கர வாகனங்களுக்கான சந்தையில் அந்தப் பிரிவு தனது 5.6 சதவீதப் பங்கை தக்க வைத்துக் கொண்டது.

3 சக்கர வாகனங்கள்: 2024 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மின்சார மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை இந்த பிப்ரவரியில் 5 சதவீதம் அதிகரித்து 53,116-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் மின்சார வா்த்தக வாகனங்களின் விற்பனை 1 சதவீதம் அதிகரித்து 856-ஆக உள்ளது. வா்த்தக வாகனச் சந்தையில் மின்சாரப் பிரிவின் பங்கு 1 சதவீதத்தைத் தாண்டியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT