கோப்புப்படம் 
வணிகம்

ரூ. 65,000-ஐ நெருங்கிய தங்கம் விலை: புதிய உச்சம்!

சென்னையில் ஆபரணத் தங்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 13) சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை சவரன் ரூ.64,320-க்கும், திங்கள்கிழமை ரூ.64,400-க்கும் விற்பனையானது.

செவ்வாய்க் கிழமை ரூ. 64,160-க்கும் விற்கப்பட்ட நிலையில், நேற்று(புதன்) அதிரடியாக ரூ. ரூ.360 உயர்ந்து ரூ.64,520-க்கு விற்பனையானது.

புதிய உச்சம்

இந்த நிலையில், சென்னையில் வியாழக்கிழமை காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 440 உயர்ந்து, ரூ. 64,960 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஒரு கிராமுக்கு ரூ. 55 அதிகரித்து ரூ. 8,120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, வெள்ளியில் விலை புதன்கிழமை காலை ரூ. 2 அதிகரித்த நிலையில், இன்றும் அதிரடியாக ஒரு ரூபார் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 110-க்கும் ஒரு கிலோ ரூ. 1,10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT