ரிசர்வ் வங்கி 
வணிகம்

ரிசர்வ் வங்கியின் செயல் நிர்வாக இயக்குநராக பட்டாச்சார்யா நியமனம்!

இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் நிர்வாக இயக்குநராக இந்திரானில் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது மார்ச் 19 முதல் அமலுக்கு வருகிறது என்றது ரிசர்வ் வங்கி.

DIN

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் நிர்வாக இயக்குநராக இந்திரானில் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது மார்ச் 19 முதல் அமலுக்கு வந்துள்ளது.

இவர் பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சித் துறையை கவனித்துக் கொள்வார் என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமலாக்கத் துறை அதிகாரியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, இந்திரானில் பட்டாச்சார்யா ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைத் துறையில் ஆலோசகராக பணியாற்றி உள்ளார்.

கத்தார் மத்திய வங்கியின் ஆளுநரின் தொழில்நுட்ப அலுவலகத்தில் பொருளாதார நிபுணராகவும் 5 ஆண்டுகள் (2009-14) பணியாற்றியுள்ளார்.

பட்டாச்சார்யா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைுயும் படிக்க: 8 சதவிகிதம் உயர்ந்து முடிந்த ரயில்டெல் பங்குகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT