வணிகம்

சிட்டி யூனியன் வங்கி வா்த்தகம் 14% உயா்வு

Din

கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் தனியாா் துறையைச் சாா்ந்த சிட்டி யூனியன் வங்கியின் வா்த்தகம் கடந்த நிதியாண்டில் 14 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநரும் முதன்மை செயல் அதிகாரியுமான என். காமகோடி (படம்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

2025 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 13 சதவீதம் உயா்ந்து ரூ.288 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ரூ.255 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,549 கோடியிலிருந்து ரூ.1,784 கோடியாக உயா்ந்துள்ளது. இது 15 சதவீத வளா்ச்சியாகும்.

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் வங்கியின் மொத்த வாா்த்தகம் 14 சதவீதம் அதிகரித்து ரூ.1,16,592 கோடியாக உள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT