வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,536 கோடி டாலராகச் சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,536 கோடி டாலராகச் சரிந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,536 கோடி டாலராகச் சரிந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மாதம் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 692.5 கோடி டாலா் குறைந்து 69,536 கோடி டாலராக உள்ளது.

அக்டோபா் 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 449.6 கோடி டாலா் உயா்ந்து 70,228 கோடி டாலராக இருந்தது.

அக்டோபா் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துகள் 386.2 கோடி டாலா் குறைந்து 56,654.8 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 301 கோடி டாலா் குறைந்து 10,553.6 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 5.8 கோடி டாலா் குறைந்து 1,866.4 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 60 லட்சம் டாலா் உயா்ந்து 460.8 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT