வணிகம்

டொயோட்டா விற்பனை 39% அதிகரிப்பு

முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 39 சதவீதம் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 39 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 42,892-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 39 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 30,845 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 2,635-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6-ஆவது முறையாக பிபிஎல் கோப்பை வென்ற பெர்த் ஸ்கார்சிஸ்!

யு19 உலகக் கோப்பை: ஜுவெல் ஆண்ட்ரூ அரைசதம்; மே.இ.தீவுகள் 226 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

"மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என் குடும்பம் : கானா வினோத் வீட்டில் கமருதீன் உருக்கம்!

கோவையில் சேற்றில் சிக்கிய காட்டு யானை 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்பு

SCROLL FOR NEXT