மேம்பட்ட ஒளிக்கலவை திறனைக் கொடுக்கும் வகையில் மினி எல்.இ.டி., என்ற புதிய ஸ்மார்ட் டிவியை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள எச்.டி., அல்ட்ரா எச்.டி., கியூ எல்.இ.டி., வரிசையில் இவற்றை விட மேம்படுத்தப்பட்ட பட அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் மினி எல்.இ.டி., வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச துல்லியம் கொண்டதாகக் கருதப்படும் கியூ எல்.இ.டியை விட 30 மடங்கு துல்லியமான காட்சிகளை வழங்கக்கூடியது மினி எல்.இ.டி., இதனால், நேரலை விளையாட்டுகள், ரியாலிட்டி நிகழ்ச்சிகளை துல்லியமாகப் பார்க்க இயலும்.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 500-nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
கேம் பிரியர்கள் விரும்பும் வகையிலான ஒளிக்கலவை உடையது. 20W ஒலி திறனைக் கொண்டது.
பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்றவை உள்செயலிகளாகவே உள்ளன.
50 அங்குலம், 55 அங்குலம், 65 அங்குலம் என மூன்று அளவுகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
50 அங்குலம் உடைய டிவியின் விலை ரூ. 36,999. மோட்டோரோலா கிளைகளில் மட்டுமின்றி, ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்திலும் கிடைக்கிறது.
இதையும் படிக்க | மினி கன்ட்ரிமென் ஆல்4 அறிமுகம்! 5.6 நொடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.