டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக நிறைவு!
இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக முடிவடைந்தது.
மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக முடிவடைந்தது.
உலகளாவிய வர்த்தகம் குறித்த நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், இந்திய ரூபாய் மதிப்பு இறுக்கமான வரம்பில் வர்த்தகமானதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஓரளவு லாபத்துடன் தொடங்கி ரூ.88.72 ஆக இருந்தது. பிறகு அதிகபட்சமாக ரூ.88.79 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.88.79 ஐ தொட்ட நிலையில், முடிவில் 4 காசுகள் சரிந்து ரூ.88.78ஆக முடிவடைந்தது.
நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.88.74 ஆக முடிந்தது.
இதையும் படிக்க: ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்வு எதிரொலி: 4வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!