வணிகம்

பரோடா வங்கியின் பண்டிகைகால சிறப்பு சலுகைகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி சிறப்பு சலுகைகளுடன் கூடிய தனது பிரசார திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

மும்பை: பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி சிறப்பு சலுகைகளுடன் கூடிய தனது பிரசார திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் பண்டிகைக் காலம் என்பது புதிய வீடு, கார் வாங்குதல் அல்லது வணிகத்தை விரிவாக்குதல் போன்ற முக்கியமானவற்றை திட்டமிடுவதற்கான நேரம். இந்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அளிக்கும் வருடாந்திர பண்டிகை பிரசாரமான "பாப் கே சங் தியோஹார் கி உமங்'கை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

வீடு வாங்குபவர்களுக்கு செயலாக்க கட்டணம் இல்லாத, ஆண்டுக்கு 7.45 சதவீத வட்டி விகிதத்தில் தொடங்கும் வீட்டுக் கடன்கள், குறைந்த வட்டி விகிதத்தில், வாகன விலையில் 90 சதவீதம் வரையிலான வாகனக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த பண்டிகைக் பிரசார திட்டத்தில் அளிக்கப்படுகின்றன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

தில்லியில் போலி எஞ்சின் எண்ணெய் உற்பத்தி ஆலை கண்டுப்பிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கனிம நெருக்கடி!

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

SCROLL FOR NEXT