தங்கம் விலை  
வணிகம்

தங்கம் விலை ரூ. 95,000-ஐ கடந்தது! புதிய உச்சம்...

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 95,200 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரலாற்றில் முதல்முறையாக கடந்த 7 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.90,000-ஐ கடந்த நிலையில், தொடர்ந்து காலை, மாலை என இருவேளையும் விலை அதிகரித்து வருகின்றது.

தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ஒரு கிராமுக்கு ரூ. 1,960, புதன்கிழமை ரூ. 280 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் ரூ. 94,880 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 320 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 11,900 -க்கும், ஒரு சவரன் ரூ. 95,200 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. ஒரு லட்சத்தை எட்டும் அச்சம் நிலவுகிறது.

இதனிடையே, அதிரடியாக உயர்ந்து வந்த வெள்ளியின் விலை நீண்ட நாள்களுக்குப் பிறகு கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 206 -க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,06,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

One Sovereign Gold price crosses Rs. 95,000 in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏஐ உலகில் கவனம் பெறும் பெர்ஃப்லக்ஸிட்டி!

"Commercial படங்களை ரசிப்பேன்! ஆனால் இதை Avoid பண்ணிருவேன்!" - மாரி செல்வராஜ் | Bison

ஏதோ ஏதோ ஏதோவொரு மயக்கம்... சாந்தினி பைன்ஸ்!

"Commercial படங்களை ரசிப்பேன்! ஆனால் இதை Avoid பண்ணிருவேன்!" - மாரி செல்வராஜ் | Bison

நெஞ்சமே நெஞ்சமே... அனுஷ்கா ரஞ்சன்!

SCROLL FOR NEXT