தங்கம் விலை.  
வணிகம்

தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,400 குறைவு!

தங்கம் விலை அதிரடியாக குறைந்திருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,400 குறைந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் சவரன் ரூ.5,600 உயர்ந்து வெள்ளிக்கிழமை சவரன் ரூ.97,600-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை தீபாவளி அன்று, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 குறைந்தது. செவ்வாய்க்கிழமை காலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,080 உயர்ந்திருந்த நிலையில், பிற்பகலில் ரூ.1,440 குறைந்து ஒரு சவரன் ரூ. 96,000 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,400 குறைந்துள்ளது.

ஒரு கிராமுக்கு ரூ. 300 குறைந்து ரூ. 11,700 -க்கும், ஒரு சவரன் ரூ. 93,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளியும் கிராமுக்கு ரூ. 2 குறைந்து, ஒரு கிராம் ரூ. 180-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 25 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Gold prices plunge by Rs. 2,400 per sovereign

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைசன் படத்துக்கு இயக்குநர் சேரன் வாழ்த்து!

தங்கம் விலை புதிய உச்சம் தொடுமா? பாபா வங்காவின் 2026 கணிப்பு என்ன?

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை!

'பைசன்' படத்திற்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு

கள்ளழகர் கோயிலில் புதிய கட்டுமானங்களுக்குத் தடை

SCROLL FOR NEXT