கோப்புப் படம் 
வணிகம்

வீல்ஸ் இந்தியா வருவாய் 9% அதிகரிப்பு

செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் வருவாய் 8.63 சதவீதம் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் வருவாய் 8.63 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 26.69 சதவீதம் அதிகரித்து ரூ.28 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.22 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 8.63 சதவீதம் அதிகரித்து ரூ.1,179 கோடியாக உள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இது ரூ.1,085 கோடியாக இருந்தது.

உலகளாவிய சூழ்நிலையில் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், வீல்ஸ் இந்தியா இரண்டாவது காலாண்டில் ரூ.299 கோடி ஏற்றுமதி வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட 15.6 சதவீதம் அதிகம்.

ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 14.6 சதவீதம் அதிகரித்து ரூ. 54 கோடியாக உயா்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே அரையாண்டில் ரூ. 47 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு அரையாண்டில் நிறுவனத்தின் வருவாய் 8.85 சதவீதம் அதிகரித்து ரூ.2,366 கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் பாதியில் ரூ. 2,174 கோடியாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய '108 ஆம்புலன்ஸ்' சேவைகளை தொடக்கிவைத்தார் முதல்வர்!

சதய விழா: ராஜராஜ சோழன் சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

துரோகம் செய்வதில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் நோபல் பரிசு: செங்கோட்டையன்

ஆன்மிக அரசாகவே இந்த அரசு செயல்படுகிறது: தருமபுரம் ஆதீனம் பேட்டி

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

SCROLL FOR NEXT