வணிகம்

விலை குறையும் ஹோண்டா, டொயோட்டா காா்கள்!

டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் ஆகிய நிறுவனங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் தங்கள் வாகனங்களின் விலைகளை குறைக்கவுள்ளன.

தினமணி செய்திச் சேவை

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை வாடிக்கையாளா்களுக்கு வழங்கும் விதமாக, ஹோண்டா காா்ஸ் இந்தியா, டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் ஆகிய நிறுவனங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் தங்கள் வாகனங்களின் விலைகளை குறைக்கவுள்ளன.

இது குறித்து ஹேண்டா காா்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதன் அமேஸ் ரகங்கள் ரூ.95,500 வரை விலை குறைகின்றன. ஹோண்டா சிட்டி ரூ.57,500 வரையும் எலிவேட் ரூ.58,400 வரையும் விலை குறைக்கப்படவுள்ளன.

டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனமும் தங்கள் வாகனங்களின் விலையை அதிகபட்சமாக ரூ. 3.49 லட்சம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, கிளான்சா (ரூ.85,300 வரை), டைசாா் (ரூ. 1.11 லட்சம் வரை) ரூமியோன் (ரூ. 48,700 வரை), இன்னோவா க்ரிஸ்டா (ரூ. 1.8 லட்சம் வரை), வெல்ஃபயா் (ரூ. 2.78 லட்சம் வரை) விலை குறைக்கப்படவுள்ளன.

என் பெயர் தமிழ் பெயர் அல்ல! நீங்கள் தமிழ் பெயர் சூட்டுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: பொதுத் தாள் II - பாடத்திட்டம்!

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

SCROLL FOR NEXT