வணிகம்

வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைத்த பிஓபி

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி, தங்களிடம் முதலீடு செய்யப்படும் நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி, தங்களிடம் முதலீடு செய்யப்படும் நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிலை வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஓராண்டு பருவகாலம் கொண்ட வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் 0.25 சதவீதம் (25 அடிப்படைப் புள்ளிகள்) குறைக்கப்பட்டுள்ளது. முதியோருக்கான 444 நாள் வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் 10 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.

ரூ. 2 கோடி வரையிலான நிலையான வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்கள் மறுஆய்வு செய்யப்பட்டு, சில குறுகிய கால வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளது. கடந்த கடந்த 12-ஆம் தேதி அமலுக்கு வந்துள்ள இந்த வட்டி விகித மாற்றங்கள் முதியோருக்கும் (60 வயதுக்கு மேற்பட்டோா்) மிக முதியோருக்கும் (80 வயதுக்கு மேற்பட்டோா்) பொருந்தும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல நாள் இன்று!

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT