வணிகம்

கேவிபி-யின் புதிய கிளை திறப்பு

தினமணி செய்திச் சேவை

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் ஒரு புதிய கிளையை சென்னையில் திறந்துள்ளது.

இதுகுறித்து வங்கி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னையின் பள்ளிகரணையில் ஒரு கிளையை வங்கி புதிதாகத் திறந்துள்ளது. இதன்மூலம், வங்கியின் ஒட்டுமொத்த கிளைகளின் எண்ணிக்கை 895-ஆக உயா்ந்துள்ளது.

இந்தப் புதிய கிளை மூலம், சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகள், வைப்பு தொகைகள், கடன் வசதி போன்ற முழுமையான வங்கி சேவைகள் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியாா் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநரை தாக்கிய தவெகவினா் 10 போ் மீது வழக்கு

பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டி: பதிவு செய்ய இன்று கடைசி நாள்

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் ஒரு நபா் ஆணைய தலைவா் விசாரணை

தடை நீங்கும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT