முகப்பு
வணிகம்

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்!

இந்திய பங்குச் சந்தை தற்போதைய நிலவரம் பற்றி...

Updated On : 17 ஏப்ரல் 2026, 11:17 am IST
பங்குச் சந்தை... - ANI
பகிர்:

இந்திய பங்குச் சந்தை வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை காலை முதல் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், சில நாள்களாக இறங்குமுகத்தில் இருந்த மும்பை பங்குச்சந்தை மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற நம்பிக்கையில் எழுச்சிப் பெறத் தொடங்கியுள்ளது.

இந்திய பங்குச் சந்தை இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில், காலை 11.10 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 78,231.81 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 77 புள்ளிகள் உயர்ந்து 24,273.90 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸில் ஹிந்துஸ்தான், மாருதி, ஐடிசி, ரிலையன்ஸ், டெக் மகேந்திரா, இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், டிசிஎஸ், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டியைப் பொறுத்தவரை வங்கி, ஃபைனன்ஸ், ஆட்டோ, மிட் கேப், ஸ்மால் கேப் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் ஏற்றத்துடனும், ஐடி துறை பங்குகள் சரிவுடனும் வர்த்தகமாகி வருகிறது.

summary

Indian Stock Market Trades Higher!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.