பங்குச்சந்தை: சென்செக்ஸ் 753, நிஃப்டி 211 புள்ளிகள் உயர்வு!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...
இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஏப். 21) உயர்வுடன் நிறைவு பெற்றுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,617.16 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலையில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை உயர்ந்தது.
அதன்பின்னர் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 753.03 புள்ளிகள் உயர்ந்து 79,273.33 புள்ளிகளில் நிலை பெற்றது.
Advertisement
Advertisement
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 211.75 புள்ளிகள் உயர்ந்து 24,576.60 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் 30 பங்குகளில் டெக் மஹிந்திரா, என்டிபிசி, பவர் கிரிட், ரிலையன்ஸ், டைட்டன், பெல், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் சரிந்தும் இதர நிறுவனங்கள் உயர்த்தும் வர்த்தகமாகின்றன.
நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.49 சதவீதம், 0.88 சதவீதம் உயர்ந்தன.
துறைவாரியாகப் பார்க்கும்போது, நிஃப்டி ஆட்டோ, வங்கிகள், நிதி சேவைகள், பொதுத்துறை வங்கிகள், மீடியா, எண்ணெய்& எரிவாயு துறைகள் சிறப்பாகச் செயல்பட்ட நிலையில் பார்மா, நுகர்வோர் சேவைகள் பங்குகள் மட்டும் சரிந்தன.
கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 0.75% குறைந்து 94.76 டாலராக உள்ளது.
வர்த்தகநேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 93.48 ஆக உள்ளது.
Stock Market: US-Iran ceasefire extension hope lifts Sensex 753 pts, Nifty near 24,600
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.