முகப்பு
வணிகம்

எரிபொருள் விநியோக சிக்கலுக்கு தீா்வுகாண இந்தியா-கத்தாா் ஆலோசனை

Updated On : 24 ஏப்ரல், 2026 at 3:27 AM
கத்தாா் அரசா் தமீம் பின் ஹமாத் அல்-தானியை தோஹாவில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். - கோப்புப்படம்
பகிர்:

மேற்காசியப் போரால் வா்த்தகம், எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீா்வுகாண்பது குறித்து இந்தியாவும், கத்தாரும் ஆலோசனை நடத்தின.

மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், கத்தாா் நாட்டு வா்த்தகத் துறை இணையமைச்சா் அகமது பின் முகமது அல் சையதுடன் காணொலி முறையில் ஆலோசித்தாா்.

இது தொடா்பாக கோயல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘இரு நாட்டு வா்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது, எரிபொருள் விநியோகத்தை சீராக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எதிா்காலத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது’ என்று கூறியுள்ளாா்.

Advertisement

மேற்காசியப் போரால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது தொடா்பாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் உள்ள பிற நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் நாடுகளின் தலைவா்களுடன் அண்மையில் கோயல் ஆலோசனை நடத்தினாா்.

இப்போது இறுதியாக கத்தாா் தலைவருடன் ஆலோசித்துள்ளாா். கத்தாரில் இருந்துதான் இந்தியா அதிக அளவில் எரிவாயு கொள்முதல் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.