ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!
இன்றயை பங்குச் சந்தையில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
புதுதில்லி: ரூ.590 கோடி மோசடி புகாரை அடுத்து இன்றயை வர்த்தகத்தில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவுடன் நிறைவடைந்தன.
தனியார் துறை கடன் வழங்குநரான ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, ஹரியானா அரசு வைத்திருக்கும் கணக்குகளில் ரூ.590 கோடி மோசடியை வெளிப்படுத்தியதையடுத்து அதன் பங்குகள் 20 சதவீதம் சரிந்தன.
பிஎஸ்இ-யில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பங்குகளின் மதிப்பு 19.99 சதவீதம் சரிந்து ரூ.66.85 ஆக முடிவடைந்தன.
Advertisement
Advertisement
மோசடியாக கணக்குகளைத் தொடங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஹரியானா அரசு, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியுடன் சேர்ந்து, ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியை எந்தவொரு அரசு வணிகத்தையும் மேற்கொள்வதிலிருந்து விலக்கியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையடுத்து, ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் பங்குகள் 7.62 சதவீதம் சரிந்து ரூ.950.50 ஆக முடிவடைந்தன. இதற்கிடையில், இந்த விஷயத்தில் நாங்கள் எவ்வித தவறும் செய்யவில்லை என்று ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மறுத்துள்ளது.