ஃபெடரல் வங்கியின் மொத்த வணிகம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 11.40 சவீத வளா்ச்சி பெற்று ரூ. 5,53,364.49 கோடியாக உயா்ந்துள்ளது.
இதில், வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.1,729.33 கோடியாக பதிவானது. இது வங்கியின் வரலாற்றிலேயே அதிகமான காலாண்டு செயல்பாட்டு லாபமாகும். நிகர லாபம் ரூ. 1,041.21 கோடி ஆகும். இது முந்திய காலாண்டுடன் ஒப்பிடும்போது 9 சதவீத வளா்ச்சியாகும்.
இந்த முடிவுகள், வங்கியின் அடிப்படை செயல்திறன் தொடா்ந்து வலுவடைந்து வருவதை காட்டுகிறது. கட்டுப்பாடான செயல்பாடுகள், கவனமான செயலாக்கத்தின் விளைவாக மாா்ஜின் மேம்பாடு, நிதி செலவு குறைவு மற்றும் சொத்து தரத்தில் நிலைத்தன்மை ஆகியவை ஏற்பட்டுள்ளன என்று வங்கியின் மேலாண்மை இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான கே.வி.எஸ். மணியன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்தாா்.
வங்கியின் இலச்சினை (லோகோ) புதுப்பிக்கப்பட்டுள்ளது. ‘ஃபாா்ச்சுனா வேவ் ’ என பெயரிடப்பட்ட புதிய இலச்சினை, நம்பகத்தன்மை, வளா்ச்சி மற்றும் கூட்டிணைப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.