முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ரெனால்ட் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த டிசம்பா் மாதம் 33 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் மாதம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,845-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 33 சதவீதம் அதிகம்.
அப்போது நிறுவனம் 2,881 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.