முகப்பு
வணிகம்

வருவாய் எதிர்பார்ப்பை எட்டாததால் ட்ரெண்ட் நிறுவனப் பங்குகள் 12% வீழ்ச்சி!

நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி சந்தை எதிர்பார்ப்புகளை எட்டாததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் 12 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தன.

Updated On : 7 ஜூலை 2026, 10:52 pm IST
பகிர்:

புதுதில்லி: சில்லறை வர்த்தகத் துறையில் முன்னணியில் உள்ள ட்ரெண்ட் நிறுவனம், ஜூன் காலாண்டில் அதன் வருவாய் வளர்ச்சி சந்தை எதிர்பார்ப்புகளை எட்டாததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் 12 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தன.

டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 12.42 சதவீதம் சரிந்து ரூ. 2,928.05 ஆக நிறைவடைந்தன. வர்த்தகத்தின் இடையில் ​​12.69 சதவீதம் சரிந்து ரூ. 2,919 தொட்ட நிலையில், நிஃப்டி-யில், இப்பங்கு 12.44 சதவீதம் சரிந்து ரூ. 2,927.80 ஆக நிலைபெற்றது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகளில் அதிக சரிவைச் சந்தித்த பங்காக இது இருந்தது.

Advertisement

Advertisement

நிறுவனம் வெளியிட்டுள்ள காலாண்டுத் தகவல்களின் அடிப்படையில், நிறுவனத்தின் வருவாய் ஜூன் காலாண்டில் 19 சதவீதம் அதிகரித்து ரூ. 5,666 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இது ரூ. 4,781 கோடியாக இருந்தது.

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், விற்பனை மூலம் கிடைத்த வருவாய் 19 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக ட்ரெண்ட் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் முதல் காலாண்டு வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 19 சதவீதம் உயர்ந்துள்ளது. வருவாய் வளர்ச்சியில் மேலும் வேகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பால் கடந்த சில வாரங்களாக ட்ரெண்ட் நிறுவனப் பங்கின் விலை ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

summary

Shares of retail major Trent ended over 12 per cent lower on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments