முகப்பு
வணிகம்

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.65! 11 காசுகள் உயர்வு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 94.65 ஆக நிறைவு.

Updated On : 24 ஜூன் 2026, 5:50 pm IST
இந்திய ரூபாய்
பகிர்:

மும்பை: சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் சரிவைத் தொடர்ந்து, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 94.65 ஆக நிலைபெற்றது.

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.05 சதவீதம் சரிந்து பீப்பாய் ஒன்றுக்கு 75.50 டாலராக வர்த்தகமானது.

உள்நாட்டு பங்குச் சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வருகை ஆகியவற்றை தொடரந்து ரூபாயின் மதிப்பு உயர்வுக்கு வலுசேர்த்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 94.88 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறாகன வர்த்தகத்தில், நாள் முழுவதும் ரூ. 94.59 முதல் ரூ. 94.93 வரையிலான வரம்பிற்குள் வர்த்தகமானது. வர்த்தக முடிவில், முந்தைய நாள் வர்த்தக முடிவிலிருந்து 11 காசுகள் உயர்ந்து ரூ. 94.65 ஆக நிலைபெற்றது.

நேற்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 94.76 ஆக நிறைவடைந்தது.

summary

The rupee appreciated by 11 paise to settle at 94.65 against the US dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments