ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.53! 5 காசுகள் உயர்வு!
இன்றைய வர்த்தகத்தில், தொடர்ந்து 3வது நாளாக ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ. 94.53 ஆக நிலைபெற்றது.
மும்பை: மேற்கு ஆசியப் பதற்றம் தணிந்ததால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து 3வது நாளாக 5 காசுகள் உயர்ந்து ரூ. 94.53 ஆக நிலைபெற்றது.
அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல் தணிந்ததாக தகவல்கள் வெளியானதும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பான உடன்பாடுகளும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கான உடனடி அச்சுறுத்தலைக் கணிசமாகக் குறைந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 94.69 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகு ரூ. 94.48 முதல் ரூ. 94.71 என்ற வரம்பிற்குள் வர்த்தகமானது. இறுதியில், அதன் முந்தைய நாள் நிலையை விட 5 காசுகள் உயர்ந்து ரூ. 94.53 என்ற அளவில் நிலைபெற்றது.
Advertisement
Advertisement
நேற்று (திங்கள்கிழமை) டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 60 காசுகள் உயர்ந்து ரூ. 94.58 ஆக இருந்தது. கடந்த மூன்று நாள் வர்த்தக அமர்வுகளில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 132 காசுகள் உயர்ந்துள்ளது.
The rupee appreciated for the third straight session on Tuesday to close 5 paise higher at 94.53.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.