டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!
இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிலைபெற்றது.
மும்பை: மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவால், உலகளாவிய வர்த்தக பதற்றங்கள் தணியும் என்ற நம்பிக்கையை தொடர்ந்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிலைபெற்றது.
உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட வலுவான போக்கும் மற்றும் டாலர் பலவீனமடைந்ததால் ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், வர்த்தகத்தின்போது ரூபாய் ரூ. 96.18 என்ற நிலையில் தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 95.78 வரையிலும், குறைந்தபட்சமாக ரூ. 96.27 வரையிலும் சென்றது. இறுதியில், முந்தைய வர்த்தக நாள் முடிவை விட 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 என்ற நிலையில் நிலைபெற்றது.
Advertisement
Advertisement
கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று, டாலருக்கு நிகரான மதிப்பில் இதுவரை இல்லாத மிகக் குறைந்த அளவிலிருந்து மீண்ட ரூபாய் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ. 96.53 என்ற நிலையில் நிறைவடைந்தது.
The rupee appreciated sharply by 61 paise to close at 95.92 against the US dollar on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.