FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!

இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிலைபெற்றது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 4:45 pm IST
இந்திய ரூபாய்
பகிர்:

மும்பை: அமெரிக்கா-ஈரான் இடையே விரைவான ஒப்பந்தம் ஏற்படும் மற்றும் ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் மங்கியதால், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிலைபெற்றது.

உலகளாவிய சந்தையில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு ஒன்றுக்கு 90 டாலரை நோக்கி நகர்வதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.40 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கி, பிறகு நாள் முழுவதும் ரூ. 95.24 முதல் ரூ. 95.43 வரையிலான வரம்பில், ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இறுதியில், முந்தைய நாள் முடிவை விட 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

நேற்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 95.36 ஆக நிறைவடைந்தது.

summary

The rupee settled just 3 paise higher at 95.33against the US dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments