அதிக மின்கட்டணம்: தவெக ஆதரவு சின்ன திரை நடிகை உருக்கமான விடியோ!
மின்கட்டணம் குறித்து சின்ன திரை நடிகை வைஷாலி வெளியிட்ட விடியோ குறித்து...
தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் அதிகரித்து வருவதாக, சின்ன திரை நடிகை வைஷாலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான கதகளி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வைஷாலி தணிகா. இதனைத் தொடர்ந்து இவர் காதல் கசக்குதையா, சர்கார், சீமராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து, ராஜா ராணி தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமான வைஷாலி தணிகா, பாண்டியன் ஸ்டோர்ஸ், நம்ம வீட்டு பொண்ணு, மகராசி, முத்தழகு உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, தனது கணவர் சத்ய தேவ் உடன் நடிகை வைஷாலி தணிகா மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்ன திரை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதனிடையே, முதல்வர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்தே, தவெகவுக்கு ஆதரவாக விடியோ வெளியிட்டு வந்தவர் நடிகை வைஷாலி தணிகா. தவெக தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்புக்கு ஆதரவாகவும் விடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், நடிகை வைஷாலி, அதிக மின்கட்டணம் தொடர்பாக, இன்ஸ்டாகிராமில் விடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான விடியோவை வெளியிட்டதற்கு, மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
இரண்டு மூன்று மாதங்களாக மின்சாரக் கட்டணம் அதிகமாக வந்துக்கொண்டிருக்கிறது. எனக்கும் இதே நிலைமைதான். தவெக மின்சாரக் கட்டணத்தில் கூறிய எதுவும், நடைமுறைப்படுத்தவில்லை.
இப்படியேபோனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். 200 யூனிட் இலவச மின்சாரம் என்பதை எடுத்துவிட்டு, முன்பாக இருந்தபடியே கணக்கீடு செய்யலாம். இதுபோன்ற சம்பவங்களால் ஆட்சியின் மீதான நம்பிக்கை குறையும்” என்று தெரிவித்துள்ளார்.
Television actress Vaishali has posted an emotional video on her Instagram page regarding the rising electricity charges in Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.