FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய் பாதுகாவலருக்கு அரசுப் பதவியா?

முதல்வர் விஜய் பாதுகாவலருக்கு அரசுப் பதவி வழங்கப்படும் என வெளியாகும் தகவல்கள் பற்றி..

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 4:40 pm IST
தமிழக முதல்வர் விஜய் - dipr
பகிர்:

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தன்னுடன் நீண்ட காலமாக பணியாற்றி வரும் பாதுகாவலர் ஒருவருக்கு அரசுப் பதவி வழங்கவிருப்பதாக உறுதி செய்யப்படாதத் தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழ்நாட்டில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் எப்போதுமே ஒரு நெருங்கிய தொடர்பு இருந்துகொண்டிருக்கிறது, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் நடிகர்களாக இருந்து முதல்வரானவர்கள். கருணாநிதியும் திரையுலகில் புகழ்பெற்றவர்தான். அண்மையில், நடிகராக இருந்து அரசியல் கட்சித் தொடங்கி தற்போது முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் ஜோசப் விஜய்.

ஆனால், முன்னாள் முதல்வர்களைப் போல அல்லாமல், ஜோசப் விஜய்யின் பதவி நியமனங்கள் சற்று வேறுபட்டு காணப்படுகிறது.

Advertisement

Advertisement

இதற்கு முன்பு இருந்த முதல்வர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை நெருக்கமாகவே வைத்துக் கொள்வார்கள். தனிப்பட்ட விவரகாரங்களைக் கவனித்துக் கொள்ள நியமித்துவிட்டு, தங்களுக்கு ஆதரவாக செயல்படுவார் என்று கருதும் அரசு அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகளை நெருக்கமான பதவிகளில் அமர்த்திக் கொள்வார்கள்.

ஆனால், முதல்வர் விஜய் அவ்வாறு இல்லை. திரைத் துறையைச் சேர்ந்த பல நண்பர்களுக்கு அரசுப் பதவி, அரசு தொடர்பான நியமனங்கள், பொறுப்புகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறார். இதற்கெல்லாம் முதல்படியாக, தன்னுடைய ஜோதிடருக்கே அரசுப் பொறுப்பு வழங்கி விமர்சனத்துக்குள்ளான நிலையில், அந்த நியமனம் ரத்தான பிறகு, பெரிய அளவில் விளம்பரங்கள் இன்றி நியமனம், பொறுப்பு, பதவிகள் வழங்கப்பட்டு வருவதாகக்கூட சந்தேகங்கள் எழுந்தன.

புது தில்லிக்கான தமிழக பிரதிநிதியாக, ஜன நாயகன் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டபோதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒரு தமிழர்கூட இல்லையா என்று கேள்விகள் எழுந்தன.

அடுத்து, விஜய்யின் நீண்ட கால மேலாளர், உதவியாளர் ஜெகதீஷ் பழனிசாமி, முதல்வருக்கான அரசியல் தனிச் செயலராக நியமிக்கப்பட்டார்.

இயக்குநர் மனோஜ் பரமஹம்சா, எம்ஜிஆர் அரசுக் கல்லூரியின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.

தற்போது இந்துசமய அறநிலையத் துறையின் அறங்காவலர் தேர்வுக் குழுவில், விஜய்யின் பிகில், கோட் படங்களைத் தயாரித்த அர்ச்சனா கல்பாதிக்கும், தவெகவின் அரசியல் விழிப்புணர்வுப் பாடலைப் பாடிய பின்னணிப் பாடகர் வேல்முருகனுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு சில அரசுப் பொறுப்புகளை தொடர்ச்சியாக வழங்கி வரும் நிலையில்தான் நீண்டகாலமாக தன்னுடைய பாதுகாவலராக இருக்கும் மூசாவுக்கு ஒரு அரசுப் பதவி வழங்கப்படும் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஒருவேளை, அண்மையில் விஜய் தனக்கு நெருக்கமானவர்களுக்கு பொறுப்புகளை வழங்கி வருவதால், ஒரு ஆரூடமாக இந்த தகவல் பரவுகிறதா? இல்லை, உண்மையில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அது கசிந்துள்ளதா? என்பதெல்லாம் உறுதி செய்யப்படவில்லை.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை, வெறும் தகவல்கள்தான் பரவி வருகின்றன. அவ்வாறு மூசாவுக்கு பதவி வழங்கப்படுவதாக இருந்தால் அது என்ன பதவியாக இருக்கலாம் என்பது பற்றியும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அந்தப் பேச்சு வெறும் அரசியல் அளவிலேயே நீடிக்கிறது.

summary

A government post for Chief Minister Vijay's bodyguard

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments