ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 94.50! 10 காசுகள் உயர்வு!
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ. 94.50 ஆக நிறைவு.
மும்பை: கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலர் குறியீடு ஆகியவை அவற்றின் உச்ச நிலையிலிருந்து சரிந்ததையடுத்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ. 94.50 ஆக நிறைவு.
அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பாலும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 79 டாலர் வரைக்கும் சரிந்தததால், உள்நாட்டில் பங்குச் சந்தை சாதகமான நிலைமையில் நிலைபெற்றது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 94.46 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகு ரூ. 94.29 முதல் ரூ. 94.60 என்ற வரம்பில் வர்த்தகமானது. இறுதியில், அதன் முந்தைய நாள் நிறைவு விலையை விட 10 காசுகள் உயர்ந்து ரூ. 94.50 ஆக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
நேற்று (செவ்வாய்க்கிழமை) டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.60 ஆக நிறைவடைந்தது.
The rupee appreciated 10 paise to close at 94.50 against the US dollar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.