FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.70 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.70 ஆக நிறைவு.

11 நவம்பர் 2026, 6:10 pm
இந்திய ரூபாய் | கோப்புப் படம்
பகிர்:

மும்பை: உள்நாட்டில் பங்குச் சந்தையின் வலிமை, வெளிநாட்டு மூலதன வரவுகள் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவால் கிடைக்க பெறும் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.70 ஆக நிலைபெற்றது.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் வரவும் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவால், உள்நாட்டுச் பங்குச் சந்தை எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியதால் ரூபாய் மதிப்பு வலுப்பெற்றதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 93.71 ஆக தொடங்கி, பிறகு அதிகபட்சமாக ரூ. 93.63 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ.93.88 ஆக இருந்தது. வர்த்தக முடிவில், அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.70 ஆக நிலைபெற்றது.

நேற்று (திங்கள்கிழமை) டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் உயர்ந்து ரூ. 93.77 ஆக இருந்தது.

summary

The rupee gained 7 paise to close at 93.70 against the US dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.