FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ. 93.93 ஆக நிறைவு!

இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ. 93.93 ஆக நிறைவு.

9 நவம்பர் 2026, 6:07 pm
இந்திய ரூபாய் | கோப்புப் படம்
பகிர்:

மும்பை: கச்சா எண்ணெய் விலை சரிவு, வலுவான வெளிநாட்டு நிதி வரவு மற்றும் மேற்கு ஆசியாவில் தணியும் பதற்றத்தால் ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ. 93.93 ஆக முடிவடைந்தது.

தொடர்ந்து வரும் வெளிநாட்டு நிதி, கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் மிதமான நிலையில் டாலரின் மதிப்பு இருப்பதால் இது ரூபாய்க்கு சாதகமாக அமைந்தாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, தொடக்க வர்த்தகத்தில் ரூ. 93.85 ஆகவும், அதிகபட்சமாக ரூ. 93.69 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ. 94.11 ஆகவும் இருந்தது. வர்த்தக முடிவில், முந்தைய நாள் முடிவிலிருந்து 5 காசுகள் உயர்ந்து ரூ. 93.93 ஆக இருந்தது.

Advertisement

Advertisement

வெள்ளிக்கிழமையன்று ரூபாய் மதிப்பு 43 காசுகள் உயர்ந்து ரூ. 93.98 ஆக நிலைபெற்றது.

summary

The rupee settled higher by 5 paise at 93.93 against dollar on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.