டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 27 காசுகள் உயர்ந்து ரூ. 93.92 ஆக நிறைவு!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 27 காசுகள் உயர்ந்து ரூ. 93.92 ஆக நிறைவு.
மும்பை: தொடர்ந்து வரும் வெளிநாட்டு நிதி, உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட எழுச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றால், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 27 காசுகள் உயர்ந்து ரூ. 93.92 ஆக நிலைபெற்றது.
உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்றம் மற்றும் வெளிநாட்டு நிதி வரவுகள் காரணமாக, ரூபாய் அதன் இரண்டு நாள் சரிவுப் போக்கிலிருந்து மீண்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இருப்பினும், அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் டாலரின் வலுவான நிலை ஆகியவற்றால் ரூபாயின் உயர்வு கட்டுப்படுத்தப்பட்டது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 94.22 ஆக தொடங்கி, வர்த்தகத்தின் போது, அதிகபட்சமாக ரூ. 93.91 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ. 94.25 ஐ எட்டியது. வர்த்தக முடிவில் அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 27 காசுகள் உயர்ந்து ரூ. 93.92 ஆக முடிவடைந்தது.