டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.44 ஆக நிறைவு!
ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.44 என்ற நிலையில் நிலைபெற்றது.
புதுதில்லி: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆரம்பகட்ட ஏற்றத்தில் இருந்து சற்று குறைந்தபோதிலும், வர்த்தகத்தின் முடிவில் 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.44 என்ற நிலையில் நிலைபெற்றது.
உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் டாலரின் வலுவான மதிப்பு ஆகியவை ரூபாயின் ஏற்றத்திற்குத் தடையாக இருந்தன. இருப்பினும், ரூபாய் மதிப்பு உயர்வுடன் முடிவடைந்தது.
Advertisement
Advertisement
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக உலகச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் மத்தியில் நிச்சயமற்ற சூழல் நிலவியது. முதலீட்டாளர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கியதுடன், டாலரின் மதிப்பும் வலுவடைந்தது. இதன் காரணமாக, காலையில் ஏற்றம் கண்ட இந்திய ரூபாய் பிறகான வர்த்தகத்தில் அதன் மதிப்பை சற்று இழந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு 93.47 என்ற அளவில் தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 93.25 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ. 93.57 என்ற நிலையை எட்டியது. வர்த்தக முடிவில், அதன் முதல் நாள் முடிவிலிருந்து 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.44 ஆக நிலைபெற்றது.