பைக் பிரிவை வலுப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டம்!
பஜாஜ் ஆட்டோ லிமிடெட், முக்கியத்துவம் வாய்ந்த 125சிசி-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மோட்டார் சைக்கிள் பிரிவை வலுப்படுத்தும்.
புதுதில்லி: நிலையற்ற சூழலுக்கு மத்தியிலும், பஜாஜ் ஆட்டோ லிமிடெட், முக்கியத்துவம் வாய்ந்த 125சிசி-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மோட்டார் சைக்கிள் பிரிவை வலுப்படுத்தும். அதே வேளையில் அதன் மின்சார ஸ்கூட்டரான சேட்டக்கை அதிவேக சார்ஜிங் சார்ந்த தொழில்நுட்பங்களை 2027 நிதியாண்டில் அறிமுகப்படுத்தும் என்று நிறுவனத்தின் தலைவர் நீரஜ் பஜாஜ் தெரிவித்தார்.
உள்நாட்டு நுகர்வு மற்றும் மின்சார வாகனப் போக்குவரத்து ஆகிய இரண்டிலும் ஈடு இணையற்ற நீண்டகால ஆற்றலை கருத்தில் கொண்டு, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து திகழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் முன்னணி ஏற்றுமதியாளரான எங்கள் நிறுவனத்திற்கு, வெளிநாட்டுச் சந்தையில் ஏற்பட்டுள்ள மீட்சி நல்லதொரு வாய்ப்பாகும். இதற்கிடையில், நடப்பு நிதியாண்டிற்கான திட்டங்களைப் பகிர்ந்துகொண்ட பஜாஜ், சந்தையின் செயல்பாடுகள் மூலம், முக்கியத்துவம் வாய்ந்த 125சிசிசி+ உள்நாட்டு மோட்டார் சைக்கிள் பிரிவில் போட்டித்தன்மையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். அதே வேளையில், கேடிஎம் மற்றும் ட்ரையம்ப் பிராண்டுகளின் வளர்ச்சிப் பாதைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, நிறுவனம் அவற்றின் வேகத்தை அதிகரிக்கும்.
Advertisement
Advertisement
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள மீட்சியைக் கருத்தில் கொண்டு, உலகளாவிய சவால்கள் மற்றும் இடையூறுகளைச் சமாளித்துக்கொண்டு, நிறுவனம் தனது ஏற்றுமதியை வெகுவாக அதிகரிக்கும்.
Bajaj Auto Ltd will strengthen strategically important 125cc plus domestic motorcycle portfolio.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.