470-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்வாகன சாா்ஜிங் நிலையங்களை நிறுவிய எம்ஜி மோட்டார்!
எம்ஜி சார்ஜ் திட்டத்தின் கீழ் நாடு 1,000 மின்வாகன சார்ஜர்களை நிறுவியுள்ளதாக அறிவித்ததுள்லது எம்ஜி மோட்டார் இந்தியா.
மும்பை: 'எம்ஜி சார்ஜ்' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 470-க்கும் மேற்பட்ட இடங்களில் 1,000 மின்வாகன சார்ஜர்களை நிறுவியுள்ளதாக எம்ஜி மோட்டார் இந்தியா இன்று அறிவித்தது.
குடியிருப்பு வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், கல்வி வளாகங்கள், ஹோட்டல்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் எனப் பல்வேறு இடங்களில் இந்த சார்ஜர்கள் நிறுவப்பட்டுள்ளது. அதே வேளயைில், இந்தியாவின் நிலையான வளர்ச்சிப் பயணத்தை பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் தெரிவித்தது.
நடப்பு ஆண்டில் 'பிளக்-இன் ஹைப்ரிட்' தொழில்நுட்பம் கொண்ட மூன்று புதிய வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்தது.
Advertisement
Advertisement
மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, தனது உற்பத்தி ஆலையில் 78 சதவீதத்திற்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதாக தெரிவித்தது எம்ஜி மோட்டார் இந்தியா. இந்த ஆலையானது தனது மொத்த மின்சாரத் தேவையில் சுமார் 95 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமே பூர்த்தி செய்வதாகவும் தெரிவித்தது.
JSW MG Motor Indiasaid it has installed 1,000 chargers at more than 470 sites across the country.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.