சாட் ஜிபிடியை இனி ஹேக் செய்ய முடியாது! புதிய அம்சம் அறிமுகம்!
செய்யறிவு தளமான சாட் ஜிபிடியின் பாதுகாப்பை அதிகரிக்கும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் புதிய அம்சம் குறித்து...
செய்யறிவு தளமான சாட் ஜிபிடியின் பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சியில் ஓபன் ஏஐ நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
சாட் ஜிபிடி பயனர்களின் பயன்பாட்டை நம்பகத்தன்மை உடையதாக மாற்றும் வகையில், ஓபன் ஏஐ நிறுவனம் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி இணையவழித் தாக்குதல்களில் இருந்து பயனர்கள் தங்கள் கணக்குகளை பாதுகாத்துக்கொள்ளலாம்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் செய்யறிவு தளமாக சாட் ஜிபிடியை இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். நாட்டில் வாரந்தோறும் 90 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். உலக அளவிலான பயன்பாட்டில் இது 11% ஆகும்.
Advertisement
Advertisement
இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான பயனர்களைக் கொண்ட சாட்ஜிபிடிக்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். ஹேக்கிங் மற்றும் பிஷிங் போன்ர இணைய தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தரவுகளுக்கு அதீத பாதுகாப்பு தேவைப்படுவோருக்கு விருப்பத் தேர்வாக (opt-in) இந்த அம்சம் வழங்கப்படுகிறது.
இந்த புதிய அம்சம் செயல்படுத்தப்பட்டவுடன், வழக்கமான கடவுச்சொல் (Password) உள்நுழைவு முறைக்கு பதிலாக பாஸ் கீ (passkey) வசதியை வழங்குகிறது.
சாட் ஜிபிடி பயனர்களின் கணக்குகளின் பாதுகாப்பை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும் வகையில் இந்த மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சத்தை ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ChatGPT becomes unhackable OpenAI boosts security
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.