முகப்பு
வணிகம்

ஜூலை மாதம் வெளியாகும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்!

ஜூலை மாதம் வெளியாகவுள்ள ஸ்மார்ட்போன்கள் பற்றி...

Updated On : 29 ஜூன் 2026, 6:41 pm IST
நத்திங் போன் (4b) - நத்திங்
பகிர்:

ஜூலை மாதம் ஸ்மார்ட்போன் சந்தைக்கு முக்கியமான மாதமாக அமையப்போகிறது. பல புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை வெளியீடாக வரும் முக்கிய ஸ்மார்ட்போன்கள் சில:

1. ஓப்போ ரெனோ 16 & ரெனோ 16c

Advertisement

Advertisement

ஜூலை 2 வெளியாகவிருக்கும் இந்த இரு மாடல்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்குகின்றன.

ஓப்போ ரெனோ 16 - 6.32-அங்குல FHD+ AMOLED திரையைக் கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசஸர் உடன் 50 மெகாபிக்ஸல் கொண்ட 3 பின்புற கேமராக்கள் மற்றும் 50 மெகாபிக்ஸல் முன்பக்க கேமராவுடன் வெளியாகிறது.

ஆண்ட்ராய்ட் 16 இயங்குதளத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 6700mAh பேட்டரிதிறனுடன் 80W சூப்பர் வூக் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது.

இதன் அறிமுக விலை ₹59,999 ஆக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓப்போ ரெனோ 16 & ரெனோ 16c - ஓப்போ

ஓப்போ ரெனோ 16c - 6.57-அங்குல FHD+ AMOLED திரையைக் கொண்டுள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 7300-எனர்ஜி பிராசஸர் உடன் 50 மெகாபிக்ஸல் கொண்ட 3 பின்புற கேமராக்கள் மற்றும் 50 மெகாபிக்ஸல் முன்பக்க கேமராவுடன் வெளியாகிறது.

ஆண்ட்ராய்ட் 16 இயங்குதளத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 7000mAh பேட்டரிதிறனுடன் 80W சூப்பர் வூக் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது.

இதன் அறிமுக விலை ₹49,999 ஆக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. நத்திங் போன் (4b)

ஜூலை 7 அன்று இந்த மாடல் வெளியாகிறது. 6.7 அங்குல 1.5k 120hz AMOLED திரையுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6வது தலைமுறை 4 ப்ராசஸர் உடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், 5,000 mAh பேட்டரிதிறனைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக விலை ₹25,000 முதல் ₹30,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நத்திங் போன் (4b) - நத்திங்

3. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டபிள்ஸ் (Z Fold 8, Z Fold 8 Ultra, & Z Flip 8)

சாம்சங்கின் மடங்கும் வகையிலான போன்களில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜூலை 22 அன்று வெளியாகவுள்ளது.

மூன்று மாடல்களும் 200 மெகாபிக்ஸல் கேமரா, 12 ஜிபி RAM என அசத்தலான வசதிகளுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில்,

  • சாம்சங் கேலக்ஸி Z Fold 8 - ₹1,54,999 முதல் ₹1,59,999 வரை

  • சாம்சங் கேலக்ஸி Z Fold 8 Ultra - ₹1,74,999 முதல் ₹1,84,999 வரை

  • சாம்சங் கேலக்ஸி Z Flip - ₹1,04,999 முதல் ₹1,09,999 வரை

நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாம்சங் கேலக்ஸி Z Fold 8 - சாம்சங்

4. ஐக்யூ Z11 5ஜி

ஜூலை மாதத்தின் நடுப்பகுதி அல்லது இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் நடுத்தர விலை சந்தையில் அதிக பேட்டரி திறனுடன் களமிறங்குகிறது.

பிரம்மாண்டமான 9020mAh பேட்டரி திறன், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் மென்மையான 165Hz AMOLED திரை என பயனாளர்களை அசத்தும் வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இதன் ஆரம்ப விலை ₹25,990 ஆக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்யூ Z11 5ஜி

5. விவோ S2

விவோ S1 மாடலின் வரிசையில் இந்தியச் சந்தையில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் விவோ S2 களமிறங்குகிறது.

6.67 இன்ச் அல்லது 6.72 இன்ச் வளைந்த AMOLED திரை, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s-சீரிஸ் அல்லது மீடியாடெக் டைமென்சிட்டி ப்ராசஸர், 50 மெகாபிக்ஸல் முன்புற - பின்புற கேமராக்களுடன் ஜூலை மாத இறுதியில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விலை ₹25,000 முதல் ₹35,000 வரை இருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

விவோ S2 - விவோ

6. மோட்டோரோலா ரேஸர் 70 அல்ட்ரா

மிகப்பெரிய 6.96-இன்ச் மடக்கக்கூடிய AMOLED பேனல் திரை, 1.5K ரெசல்யூஷன் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. 5000mAh திறன் கொண்ட சிலிக்கான்-கார்பன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில், 68W சார்ஜிங் மூலம் 41 நிமிடங்களில் 0 முதல் 100% வரை சார்ஜ் செய்யமுடியும்.

இதன் விலை ₹1,09,990 முதல் ₹1,14,990 வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. ஜூலை மாத நடுப்பகுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மோட்டோரோலா ரேஸர் 70 அல்ட்ரா - மோட்டோரோலா
summary

Amazing smartphones list releasing in July!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments