முகப்பு
வணிகம்

பங்குச் சந்தை உயர்வு எதிரொலி: முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 9.18 லட்சம் கோடி அதிகரிப்பு!

இந்திய பங்குச் சந்தை மீண்டு எழுந்ததையடுத்து முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 9.18 லட்சம் கோடியாக அதிகரிப்பு.

Updated On : 18 மார்ச், 2026 at 3:11 PM
Investors wealth surges
பகிர்:

புதுதில்லி: கடந்த 3 நாட்களாக, இந்திய பங்குச் சந்தை மீண்டு எழுந்ததையடுத்து முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 9.18 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று வர்த்தக நாட்களில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 2,140.21 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 633.29 புள்ளிகள் உயர்ந்து 76,704.13 புள்ளிகளாக நிலைபெற்றது.

பங்குகளின் மீட்சியைத் தொடர்ந்து, பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் மூன்று நாட்களில் ரூ. 9,18,579.57 கோடி அதிகரித்து ரூ. 4,39,00,831.84 கோடியாக உயர்ந்துள்ளது.

முதலீட்டாளர்களிடம் பங்கு வாங்கும் ஆர்வம் சீராக அதிகரித்ததன் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக ஏற்றத்தை பதிவு செய்து வருகின்றன.

summary

Equity investors wealth surged by Rs 9.18 lakh crore in three days of market rebound amid buying and recovery in global benchmark indices.

முழு கட்டுரையைப் படிக்க →