முகப்பு
வணிகம்

தொடர்ந்து 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு! ஆட்டோ, ஐடி பங்குகள் உயர்வு!!

சென்செக்ஸ் 633.29 புள்ளிகள் உயர்ந்து 76,704.13 புள்ளிகளாகவும், நிஃப்டி 196.65 புள்ளிகள் உயர்ந்து 23,777.80 புள்ளிகளாக நிலைபெற்றது.

Updated On : 18 மார்ச் 2026, 5:40 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து காளையின் கைவசம் சென்று உள்ளதையடுத்து, தொடர்ந்து 3வது நாளாக ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை.

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் உலகளாவிய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமானதால், உள்ளூரில் ஆட்டோ, தகவல் தொழில்நுட்பப் பங்குகளில் ஏற்பட்ட ஏற்றும், பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட 1 சதவீதம் உயர்ந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 929.38 புள்ளிகள் உயர்ந்து 77,000.22 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 633.29 புள்ளிகள் உயர்ந்து 76,704.13 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 196.65 புள்ளிகள் உயர்ந்து 23,777.80 புள்ளிகளாக நிலைபெற்றது.

Advertisement

Advertisement

சென்செக்ஸில் எடர்னல், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், மஹிந்திரா & மஹிந்திரா, எச்.சி.எல் டெக், அதானி போர்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் என்.டி.பி.சி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், சன் பார்மா மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவை பங்குகள் சரிந்தன.

நிஃப்டி-யில் ஜியோ ஃபைனான்சியல், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், எடர்னல், மஹிந்திரா & மஹிந்திரா பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் கோல் இந்தியா, என்டிபிசி, ஹெச்யுஎல், சிப்லா மற்றும் சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.

எஃப்எம்சிஜி மற்றும் உலோக பங்குகள் தவிர ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம், ஆட்டோ, ஊடகம், மூலதனப் பொருட்கள், தொலைத்தொடர்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்டவை 1 முதல் 3 சதவீதம் வரை உயர்ந்தன.

நிஃப்டி-யில் 3,328 பங்குகள் வர்த்தகமான நிலையில் 2,537 பங்குகள் உயர்ந்தும் 706 பங்குகள் சரிந்தும் 85 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 5 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 225 குறியீடு 2.87 சதவீதமும், ஷாங்காய் எஸ்.எஸ்.இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் உயர்வுடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்த முடிவடைந்த நிலையில் அமெரிக்க சந்தை நேற்று (செவ்வாய்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தது.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ. 4,741.22 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 5,225.32 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

குஜராத் ஸ்டேட் பெட்ரோ, சிப்லா, டாடா கெமிக்கல்ஸ், குஜராத் கேஸ், ஹனிவெல் ஆட்டோமேஷன், பிராக்டர் அண்ட் கேம்பிள் ஹைஜீன் அண்ட் ஹெல்த் கேர், சி. இ. இன்ஃபோ சிஸ்டம்ஸ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வாரக் குறைந்தபட்ச விலையை எட்டியது.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 0.10 சதவீதம் சரிந்து 103.3 அமெரிக்க டாலராக உள்ளது.

summary

Stock market benchmark indices Sensex and Nifty ended nearly 1 per cent higher on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments