முகப்பு
வணிகம்

பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,953 புள்ளிகள் சரிவு! காரணம் என்ன?

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது பற்றி...

Updated On : 19 மார்ச் 2026, 10:37 am IST
பங்குச் சந்தை | கோப்புப் படம்
பகிர்:

இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை காலை கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வருகின்றது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 1,953.21 புள்ளிகள் சரிந்து 74,750.92 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. 2.55 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது.

மேலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 580.05 புள்ளிகள் சரிந்து 23,197.75 புள்ளிகளாக வர்த்தகத்தை தொடங்கியது.

Advertisement

Advertisement

காலை 10.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 75,045.97 புள்ளிகளில் வர்த்தகமாகும் நிலையில், ரிலையன்ஸ், பவர்கிரிட் நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.

நிஃப்டியிலும் ஐடி, வங்கி, பார்மா உள்ளிட்ட துறைகளின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.

காரணம் என்ன?

இந்த வாரத்தின் முதல் மூன்று நாள்கள் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தைகள், மேற்காசிய நாடுகள் போர்ப் பதற்றம் காரணமாக இன்று சரிவை சந்தித்துள்ளன.

கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 9 நாடுகளின் எரிபொருள் உற்பத்தி மையங்களை குறிவைத்து ஈரான் நேற்றிரவு மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி உற்பத்தி ஆலையில் தீப்பற்றி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், வளைகுடா நாடுகள் எரிபொருள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

இதன்காரணமாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 110 டாலரைக் கடந்துள்ளது.

இந்த நிலையில், சர்வதேச அளவில் இன்று பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.

summary

Stock market crash! Sensex falls 1,953 points! What is the reason?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments